தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்வது அடுத்து ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
இன்று அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தொடங்கியதை அடுத்து இந்த ஊரடங்கு வரும் 24ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ஊரடங்கு நீடிக்குமா என்பதை அன்றைய நிலையைப் பொறுத்துதான் தமிழக அரசு முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் உள்பட எந்த வித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மெட்ரோ ரயில்கள், புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து கொரோனா பாதிப்பு குறைய ஒத்துழைக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது