டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் டென்மார்க் நாட்டில் உள்ள ஹில்லர்ட் நகரில் நடந்து வருகிறது.
முதல் நாள் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த யுகி பாம்ப்ரி , ஹிலகர் ரூனேவை எதிர்கொண்டார்.
இதில், 2-6,2-6, என்ற நேர்செட் கணக்கில் யுமி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.
இதனால், இந்தியா 0-1 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.
மற்றொரு போட்டியில் இந்திய வீரர் சுமித் நகல், ஹோம் கிரனுடன் விளையாடவுள்ளார்.
இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.