Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்... தனது சாதனையைத் தானே முறியடித்த சுமித் அண்டில்!

vinoth
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:40 IST)
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் 184 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர்.

இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் 32 பெண் வீராங்கனைகள் உட்பட 84 பேர் கலந்து கொள்கிறார்கள். கடந்த வாரம் இந்த போட்டிகள் தொடங்கிய நிலையில் ஈட்டி எறிதலில் இந்திய வீரரான சுமித் அண்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் தன்னுடைய  முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். கடந்த பாராலிம்பிக் போட்டியிலும் அவர் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments