Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினேஷ் போகத் தகுதி நீக்கம் ஏன்? இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு விளக்கம்..!

Mahendran
புதன், 7 ஆகஸ்ட் 2024 (13:12 IST)
இந்தியாவின் வினேஷ் போகத் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் அரையிறுதியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் சற்றுமுன் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
நேற்று மாலை இரண்டு கிலோ கூடுதலாக உடல் எடை இருந்த நிலையில் இரவு முழுவதும் சாப்பிடாமல் தூங்காமல் விடிய விடிய வினேஷ் உடற்பயிற்சி செய்தார். இவ்வளவு செய்தும் காலையில் சுமார் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த நேரத்தில் வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை, வினேஷ் போகத் தனி உரிமைக்கு மரியாதை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்’ என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments