Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஊதியம் உயர்வு- பிசிசிஐ

Advertiesment
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஊதியம் உயர்வு- பிசிசிஐ
, வியாழன், 15 டிசம்பர் 2022 (18:36 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு 30% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான அணியாக இந்திய அணி உள்ளது.

உலகக் கோப்பை தொடரிலும், சமீபத்தில் டி-20 உலகக் கோப்பையிலும் இந்திய அணியின் தொடர் தோல்வியால் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது, வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், சோபிக்காத இந்திய அணி கடைசி போட்டியில் மட்டும் 400 ரன் கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது.

இந்த  நிலையில், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய ஆலோசனை கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், இந்திய அணியின் கேப்டன் மற்றும் அணியின் வீரர்கள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இந்த நிலையில்,  ஒவ்வொரு ஆண்டு இந்திய அணி வீரர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படும் நிலையில், இம்முறை வீரர்களுக்கு 30% ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வீரர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை, A+- கிரேட் ஊழியர்கள் 7 ரூபாய் ஊதியமும்,A- கிரேட் ஊழியர்கள்5 கோடி ரூபாயும்,B-கிரேட் ஊழியர்கள் ரூ 3கோடி ஊதியமும், Cகிரேட் ஊழியர்களுக்கு ரூ. 1கோடி ஊதியம் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பையில் பிரான்ஸ் வெற்றி: மொரோக்கோ ரசிகர்கள் 120 பேர் கைது!