Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட் ஆகாமலே அவுட்டான ரோஹித் சர்மா? – ரசிகர்கள் கொந்தளிப்பு

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (18:23 IST)
இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா அவுட் ஆகாத நிலையில் அவருக்கு அவுட் கொடுத்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்து வரும் நிலையில் தொடக்க வீரரான ரோகித் ஷர்மா அதிகமான ரன்கள் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 18 ரன்களில் அவுட் ஆனார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விக்கெட் விழுந்ததும் நடுவர்கள் அது விக்கெட் இல்லை என்றே கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது நடுவரை நாடியது. அதில் பந்து மட்டையில் உரசியபடி, பேடில் பட்டு போனது. எனினும் இதை மூன்றாவது நடுவர் விக்கெட் என அறிவித்தார். ஆனால் அது அவுட் இல்லை. நடுவர்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு துணைபோகிறார்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments