Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்றது இந்திய அணி

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (14:00 IST)
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று விட்ட இந்திய அணி தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடி வருகிறது
 
இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி சற்றுமுன் வரை 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது
 
தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 29 ரன்களும் கேஎல் ராகுல் 24 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-0 என்ற கணக்கில் மொத்தமாக ஜிம்பாவே அணியை வாஷ் அவுட் செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர்… அர்ஷ்தீப் சிங் சாதனை!

இந்தியாவுக்கு எதிரானப் போட்டி… போராடித் தோற்ற ஓமன்!

பாகிஸ்தான் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை… கபில் தேவ் விமர்சனம்!

ரோஹித் ஷர்மா மட்டும் கேப்டனாக ‘அதை’ செய்யவில்லை… மனோஜ் திவாரி கருத்து!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 போட்டியில் மோதும் 4 அணிகள் எவை எவை? இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்?

அடுத்த கட்டுரையில்
Show comments