Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசி ஒருநாள் போட்டி.. பவுலிங்கை தேர்வு செய்த இந்திய அணி!

Advertiesment
India Vs England
, ஞாயிறு, 17 ஜூலை 2022 (15:17 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சுற்றுபயண ஆட்டங்கள் இங்கிலாந்தி நடந்து வருகிறது. முன்னதாக நடந்த டி20 தொடரை தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டிகள் நடந்து வருகின்றன.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தனது வலிமையை இங்கிலாந்து காட்டியது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து