Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் ஒருநாள் போட்டி: 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

india won wi
, சனி, 23 ஜூலை 2022 (09:25 IST)
முதல் ஒருநாள் போட்டி: 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்களும் கில் 64 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
இதனை அடுத்து 309 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை வென்றார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா இல்லாதது ஏன்? ரசிகர்கள் அதிருப்தி!