Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அணி த்ரில் வெற்றி; சூறாவளியாக மாறிய அஸ்வின்

Advertiesment
இந்திய அணி த்ரில் வெற்றி; சூறாவளியாக மாறிய அஸ்வின்
, செவ்வாய், 7 மார்ச் 2017 (16:00 IST)
பெங்களூரில் நடைப்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அஸ்வினின் சுழற்பந்து வீச்சால் வெற்றி பெற்றது.


 

 
பெங்களூரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த 4ஆம் தேதி  2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 
 
முதல் நாள்: 
 
முதல் நாள் முடிவடையும் முன்பே இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சூழலில் சுருண்டது. 189 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிக்ஸில் ஆல் அவுட் ஆனது. 
 
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியே அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் அட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 40 ரன்கள் குவித்து விக்கெட் எதுவும் இலக்காமல் இருந்தது.
 
இரண்டாவது நாள்:
 
இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி 6 விக்கெட்டு இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவை விட 48 ரன்கள் முன்னிலை பெற்றது.
 
மூன்றாவது நாள்:
 
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 29 ஓவர்களில் 38 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 276 குவித்தது. இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் முகுந்த் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் அரை சதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 15 ரன்களில் அவுட் ஆகி இந்த முறையும் ஏமாற்றினார். கோலியை தொடர்ந்து ஜடேஜா 2 ரன்களில் வெளியேறினார்.
 
தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப சூழலில் இருந்தது. புஜாரா மற்றும் ரகானே கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளது. இருவரும் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது.
 
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
 
நான்காவது நாள்: 
 
தொடர்ந்து ஆடிய இந்திய இந்திய உணவு இடைவேளை முன்பே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 குவித்தது. 
 
இதயடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போல ஆடினால் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெறும். இன்று நான்காவது நாள் தான். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
 
இந்திய அணி எதிர்ப்பார்க்காத வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படியும் ஒரு சாதனையா: அஷ்வின் அபாரம்!!