Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒன்மேன் ஆர்மியாக நின்று வெற்றியை தேடி கொடுத்த தோனி

Advertiesment
ஒன்மேன் ஆர்மியாக நின்று வெற்றியை தேடி கொடுத்த தோனி
, வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (23:38 IST)
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இன்று 2வது ஒருநாள் போட்டி கண்டியில் நடைபெற்றது. 



 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 236 ரன்கள் எடுத்தது. 
 
மழை குறுக்கிட்டதால் 47 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி நல்ல ஓப்பனிங் கொடுத்தது. 108 ரன்கள் வரை விக்கெட்டே விழாமல் இருந்த நிலையில் திடீரென ரோஹித் சர்மாவும், தவானும் அவுட் ஆகினர். அதன் பின்னர் மடமடவென விக்கெட்டுக்கள் சரிந்து ஒருகட்டத்தில் இந்திய அணி 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது.
 
இந்த நிலையில் தோனி, புவனேஷ்குமாருடன் ஜோடி சேர்ந்து ஒன்மேன் ஆர்மியாக செயல்பட்டு போட்டியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அவர் கொடுத்த தைரியத்தில் பவுலர் புவனேஷ்குமார் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி 44.2  ஓவர்களில் 231 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அனி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2019 உலகக்கோப்பையில் தோனி: கோலி நம்பிக்கை!!