இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது என்பதும் தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 248 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இது நூறாவது போட்டி என்பதும் இந்த போட்டியில் அவர் 45 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது