Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!

177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!

Siva

, திங்கள், 8 ஜூலை 2024 (08:53 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை வந்ததால் முடிவு பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தன. இதனை அடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்க இந்திய மகளிர் அணி தயாரான நிலையில் திடீரென மழை பெய்தது.

மழை நிற்பதற்காக காத்திருந்த நிலையில் கடைசி வரை மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில்  இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி 5 ஓவர்களில் பேயாட்டம் ஆடும் ரிங்கு சிங்… சீனியர் வீரர்களை ஓரம்கட்டி படைத்த சாதனை!