12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இன்று தனது முதல் போட்டியை தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான போட்டி சவுதாம்ப்டன் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு துவங்குகிறது. உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் முதல் போட்டி இது.
இந்திய அணியை பொருத்தவரை விராட் கோலி, தோனி, ரோகித் சர்மா, தவான், ராகுல் ஆகியோரின் அனுபவமும், ஹர்திக் பாண்டியாவின் திறனும், பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமியின் பந்துவீச்சும் கைக்கொடுக்கும் என தெரிகிறது.
தென் ஆப்ரிக்காவை பொருத்த வரை ஸ்டெயின் காயத்தால் விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக் பார்க்கப்படுகிறது. டூப்ளஸ்சி தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி ஏற்கனவே உலக கோப்பையில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் மோது தோலிவி அடைந்துள்ளது.
எனவே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் தென் ஆப்ரிக்கா களமிறங்கும். அதே போல் இந்திய அணியும் முதல் போட்டியை வெற்றியுடன் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கும். இதனால் போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இதுவரை இந்தியா - தென் ஆப்ரிக்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 83 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் தென் ஆப்ரிக்கா 46 வெற்றிகளையும் இந்தியா 34 வெற்றிகளையும் பதிவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.