Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் ஒருநாள் போட்டி; வெற்றி பெறுமா இந்தியா?

Advertiesment
முதல் ஒருநாள் போட்டி; வெற்றி பெறுமா இந்தியா?
, வியாழன், 1 பிப்ரவரி 2018 (11:09 IST)
இந்தியா- தென்னாப்பரிக்கா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

 
தென்னாப்பரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பரிக்க அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
 
டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. மேலும் ஒருநாள் தொடரை 4-2 என்ற கணக்கில் கைபற்றும் பட்சத்தில் ஐசிசி தரவரசையில் தென்னாப்பிரிக்காவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே இந்த ஒருநாள் போட்டி தொடர் இரு அணிகளுக்கும் சவாலாகவும், ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியின் கேப்டன் பதவியை கைப்பற்றிய இளம் வீரர்