Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் டி20: ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து!

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (20:23 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று முதல் ஆரம்பிக்கவிருந்த நிலையில் இன்று தர்மசாலாவில் முதல் டி20 போட்டி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது
 
 
ஆனால் டாஸ் போடும் முன்னரே தர்மசாலாவில் மழை பெய்ய ஆரம்பித்ததால் டாஸ் போடுவதை நடுவர்கள் தள்ளி வைத்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் மழை நிற்பது போல் தெரியவில்லை. மைதானத்தில் நேரம் ஆக ஆக மழைநீர் அதிகமாகி கொண்டே வந்தது. இதனையடுத்து மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி ரத்து என அறிவித்தனர். இதனால் தர்மசாலாவில் நேரடியாக போட்டிய கண்டு ரசிக்க வந்த ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 
 
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி சண்டிகாரில் வரும் 18ஆம் தேதி நடைபெறும் அதனையடுத்து 3வது டி20 போட்டி பெங்களூரில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் அக்டோபர் 2 முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் என்பதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10ஆம் தேதியும் 3வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி ராஞ்சியிலும் நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments