இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று, நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய சுழல் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டையும், வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 22 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு, நியூசிலாந்து அணி 104 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியின் முக்கிய ஆட்டக்காரராக கருதப்பட்ட அச்சின் ரவீந்திரா 37 ரன்களில் அவுட் ஆனார். அதேபோல், தொடக்க ஆட்டக்காரர் யங்15 ரன்களிலும், நட்சத்திர ஆட்டக்காரர் வில்லியம்சன் 11 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
தற்போது மிட்செல் மற்றும் லாதம் ஆகியோர் விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியின் தற்போதைய நிலை இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.