Publish Date: Sat, 03 Feb 2024 (17:02 IST)
Updated Date: Sat, 03 Feb 2024 (17:04 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே தற்போது இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஜெய்ஸ்வால் அபார இரட்டைச் சதம் காரணமாக 396 ரன்களில் முதல் இன்னிசை முடித்தது.
இதனை அடுத்து இங்கிலாந்து அணி விளையாட தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 253 ரன்களில் ஆட்டம் இழந்தது. பும்ரா அபாரமாக பந்து வீசீ 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. சற்றுமுன் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.