சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

Siva
ஞாயிறு, 27 ஜூலை 2025 (16:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் 90 ரன்கள் எடுத்த நிலையில் சதத்தை நூலிழையில் தவறவிட்டார். மறுமுனையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 90 ரன்களுடன் சதத்தை நோக்கி விளையாடி வருகிறார், இன்னும் சில நிமிடங்களில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 75 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா இன்னும் 118 ரன்கள் பின்தங்கி உள்ளது.
 
இன்றைய நாள் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட் இழப்பின்றி நிலைத்து நின்று விளையாடினால், இந்த போட்டியை டிரா செய்ய முடியும். எனவே, போட்டியை டிரா செய்ய இந்திய பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இங்கிலாந்து தரப்பில், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments