Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தமுறை வெல்லுமா இந்தியா? – வங்கதேசத்துடன் இன்று மோதல்!

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (09:41 IST)
இந்தியா – வங்கதேசம் இடையேயான இரண்டாவது டி20 ஆட்டம் இன்று மாலை தொடங்க உள்ளது.

இந்தியா – வங்கதேசம் இடையேயான டி20 போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 3ம் தேதி தொடங்கிய முதல் டி20 ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது வங்கதேசம். இது இந்திய அணிக்கு பெரும் அடியாக இருந்தது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி இல்லாததும் புதிய கேப்டனான ரோகித் ஷர்மாவின் தடுமாற்றத்தாலும் முதல் ஆட்டம் சொதப்பியதாக பலர் கருதுகின்றனர்.

பேட்டிங்கில் 6 ரன்களிலேயே ரோகித் ஷர்மா அவுட் ஆகிவிட ஷிகார் தவான் ஈடுகொடுத்து விளையாடி 41 ரன்கள் எடுத்து அணியின் ரன்ரேட்டை முடிந்தளவு தக்க வைத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது இந்தியா.

பிறகு களமிறங்கிய வங்கதேசம் 19ஓவர்கள் 3 பந்துகள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து  வெற்றிபெற்றனர்.

இந்நிலையில் இன்று நடக்க இருக்கும் இரண்டாவது ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சென்ற முறை ஏற்பட்ட இடர்பாடுகளை களைந்து இந்த முறை ரோகித் சர்மா கேப்டனாகவும், ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் சாதிக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு. ஷிகார் தவான் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments