Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா மாயாஜாலம் எடுபடவில்லையா? முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

Siva
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (17:44 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடக்கும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 180 ரன்கள் ஆட்டம் இழந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் இன்று இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால் முதல் பந்தில் அவுட்டான நிலையில் கேஎல் ராகுல் 37 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 42 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து இந்தியா 180 ரன்கள் ஆட்டம் இழந்த நிலையில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிசை தொடங்கியது. 11வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் 13 ரன்களில் அவுட் ஆனாலும், அதன் பிறகு பேட்டிங் செய்த நாதன் மற்றும் லாபுசாஞ்சே ஆகிய இருவரும் நிலைத்து நின்று ஆடி வருகின்றனர்.

இன்றைய ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 94 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்த நிலையில், மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்கவில்லை. இருப்பினும் நாளை இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் களத்தில் இறங்கும் சேவாக், விராத் கோஹ்லியின் குடும்ப வாரிசுகள்..! ஏலப்பட்டியலில் இடம்..!

பார்ட் டைம் வேலை பார்க்க மறுத்த வினோத் காம்ப்ளி.. என்ன காரணம்?

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் இருக்க மாட்டார்களா?... பின்னணி என்ன?

உலகிலேயே முதல் கிரிக்கெட் வீரர்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் செய்த அசத்தலான சாதனை

இந்திய அணி பும்ராவையே அதிகம் சார்ந்துள்ளது… அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தேவை- அசாருதீன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments