Webdunia - Bharat's app for daily news and videos

Install App

72 ரன்களுக்குள் 3 விக்கெட்: இந்தியா திணறல்!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (13:10 IST)
72 ரன்களுக்குள் 3 விக்கெட்: இந்தியா திணறல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 578 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கில் மற்றும் புஜாரே விளையாடி நிலையில் கில் 29 ரன்களுக்கும் கேப்டன் விராட் கோலி 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் என்ற நிலையில் விளையாடி வருகிறது. இன்னும் முதல் இன்னிங்சில் 505 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்ய திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளையும் டாம் பெஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர் 
 
இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதி உள்ள நிலையில் இந்த போட்டி டிரா அல்லது இந்திய அணிக்கு தோல்வி என்ற முடிவுதான் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments