8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

Siva
வியாழன், 23 அக்டோபர் 2025 (12:37 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
 
தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஷுப்மன் கில் 9 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து வந்த விராட் கோலி டக் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர்.
 
எனினும், ரோஹித் ஷர்மா (73 ரன்கள்) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (64 ரன்கள்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணிக்கு ஓரளவுக்கு பலம் சேர்த்தனர். அதனை தொடர்ந்து அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்தார்.
 
ஆனால், அதன் பின்னர் களமிறங்கிய கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்த நிலையில், இந்திய அணி தற்போது 46 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்துள்ளது.
 
ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சேவியர் பார்ட்லெட் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments