ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

Siva
ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (14:26 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பெர்த் நகரில் தொடங்கியது.
 
போட்டிக்கு முன்னரே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 26 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
 
சற்றுமுன் வரை, 22 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ரோகித் சர்மா 8 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் (டக் அவுட்) வெளியேறினர். கேப்டன் சுப்மன் கில் 5 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களிலும், அக்சர் படேல் 31 ரன்களிலும் அவுட் ஆகிவிட்டனர்.
 
தற்போது, கே.எல். ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments