Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுல் சதம்… பண்ட் & ஹர்திக் அதிரடி – இந்திய அணி 336 ரன்கள் சேர்ப்பு!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (17:22 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று புனே மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி துவங்க உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் 4 ரன்களிலும் ரோஹித் ஷர்மா 25 ரன்களிலும்  ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் கோலி மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். கோலி 66 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து ஆடிய ராகுல் சிறப்பாக விளையாடி சதமடித்து 106 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலிக்குப் பின் களமிறங்கிய பண்ட் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

அதன் பின்னர் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சேர்ந்து இங்கிலாந்து பவுலர்களுக்கு வானவேடிக்கைக் காட்டினர். பண்ட் 40 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து அவ்ட் ஆக, பாண்ட்யா 16 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இவர்களின் அதிரடியால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் சேர்த்தது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments