Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொளந்து கட்டும் பண்ட்… கே எல் ராகுல் சதம் – வலுவான நிலையில் இந்தியா!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (16:40 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று புனே மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி துவங்க உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் 4 ரன்களிலும் ரோஹித் ஷர்மா 25 ரன்களிலும்  ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் கோலி மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். கோலி 66 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து ஆடிய ராகுல் சிறப்பாக விளையாடி சதமடித்தார். கோலிக்குப் பின் களமிறங்கிய பண்ட் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இந்தியா தற்போது வரை 3 விக்கெட்களை இழந்து 267 ரன்களை சேர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments