Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி வெற்றி.. சென்னை மெரினாவில் கொண்டாடிய ரசிகர்கள்..

Siva
திங்கள், 10 மார்ச் 2025 (07:10 IST)
நேற்று நடந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதி போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து, அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரபல நடிகர்களும் அரசியல் தலைவர்களும் இந்திய அணிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், நேற்றைய போட்டியை நேரலையாக சென்னை மெரினாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் அதைக் கண்டு ரசித்தனர். குறிப்பாக, இந்திய அணி வெற்றி பெற்றவுடன் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கொண்டாடியதைப் போல், மெரினாவில் கூட ரசிகர்கள் ஆட்டம் ஆடி, பாட்டு பாடி உற்சாகமாக கொண்டாடினர்.
 
“சிஎஸ்கே மேட்ச் பார்த்த மாதிரியே இருந்தது! கடைசியில் ஜெயிச்சுட்டாங்க!” என பலர் கருத்து தெரிவித்தனர். இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர். கடைசி வரை திரில்லாக சென்ற போட்டியில், இறுதியாக இந்தியா வெற்றி பெற்றது.
 
குறிப்பாக, வருண் சக்கரவர்த்திக்கு வாழ்த்துக்கள்! என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்திய அணி வெற்றி பெற்றவுடன், சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக ஆட்டம் ஆடி, பாட்டு பாடி கொண்டாடிய புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments