Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழையால் இந்தியா. பாகிஸ்தான் ஆட்டம் பாதிப்பு – ரசிகர்கள் கடும் அதிருப்தி !

Advertiesment
மழையால் இந்தியா. பாகிஸ்தான் ஆட்டம் பாதிப்பு – ரசிகர்கள் கடும் அதிருப்தி !
, ஞாயிறு, 16 ஜூன் 2019 (18:21 IST)
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி 47 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம், இன்று மதியம் இந்திய நேரப்படி 3.00 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது.

இதில் டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதுதான் வாய்ப்பு எனப் பேட் செய்தது. ரோஹித்தும் ராகுலும் சிறப்பான தொடக்கம் கொடுக்க இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கே எல் ராகுல் 59 ரன்களில் அவுட் ஆக ரோஹித் ஷர்மா அற்புதமாக விளையாடி 140 ரன்களை சேர்த்து அசத்தினார். அடுத்ததாக வந்த பாண்ட்யா 26 ரன்களிலும் தோனி 1 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

சிறப்பாக விளையாடிய கோஹ்லி 71 ரன்களுடனும் விஜய் சங்கர் 3 ரன்களுடனும் களத்தில் இருந்த போது மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. போட்டி மீண்டும் தொடங்குவது குறித்து விரைவில் நடுவர்கள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி ’புதிய உலக சாதனை’!