Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களை பார்த்து திருந்துங்கய்யா? இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு காதல் ஜோடி அறிவுரை

, திங்கள், 5 ஜூன் 2017 (23:02 IST)
நேற்று இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதின. வழக்கம் போல் இதை ஒரு விளையாட்டாக பார்க்காமல் ரசிகர்கள் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போர் போலத்தான் பார்த்தார்கள்



 


போட்டி முடிந்து இந்தியா வெற்றி பெற்றதும் அந்த நள்ளிரவிலும் இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதேபோல் பாகிஸ்தானில் டிவிக்கள் உடைக்கப்பட்டு, பாகிஸ்தான் வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டு ஒரே பரபரப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்த போட்டியின் இடையே ஒரு காதல் ஜோடி இருநாட்டு ரசிகர்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ஜோடியாக போட்டியை ரசித்தனர். இதில் என்ன வியப்பு என்றால் இந்த காதல் ஜோடியில் பெண், பாகிஸ்தான் ஆதரவாளராகவும், பாகிஸ்தான் ரன்கள் அடிக்கும்போது விக்கெட்டுக்கள் எடுக்கும்போது பாகிஸ்தான் கொடியை ஆட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதேபோல் அவருடைய காதலர் இந்தியாவுக்கு ஆதரவாக அவ்வப்போது கரகோஷம் எழுப்பி வந்தார். பின்னர் போட்டி முடிந்ததும் இருவரும் ஒன்றாக சென்றுவிட்டனர்.

ஸ்போர்ட்ஸை எங்களை மாதிரி ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்து கொண்டு திருந்துங்கயா என்று சொல்லாமல் சொன்ன அந்த ஜோடி தான் நேற்றைய ஆட்ட நாயகர்கள் என்று ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பஸ்சை முற்றுகையிட்ட பாகிஸ்தான் கும்பல்