7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. அக்சர் பட்டேல், அஸ்வின் மானத்தை காப்பாற்றுவார்களா?

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (11:46 IST)
7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. அக்சர் பட்டேல், அஸ்வின் மானத்தை காப்பாற்றுவார்களா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையே இந்தூரில் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் நாளிலேயே சுழல் பந்துவீச்சு பயங்கரமாக சுழல்வதால் இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 26 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தற்போது அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் விளையாடுகின்றனர். ஏற்கனவே இருவரும் சேர்ந்து ஒரு சில டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்து உள்ளனர் என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியிலும் மரியாதைக்குரிய ஸ்கோரை உயர்த்த இந்த இருவரும் முயற்சிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
ஆஸ்திரேலியா அணியின் நாதன் லயான் மற்றும் கேமரூன் கிரீன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வைத்துள்ளனர் என்பதும் முர்ஃபி ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்..!

மண்வெட்டியை மண்வெட்டி என்று சொல்லுங்கள்… நிதிஷ்குமாரை சாடிய ஸ்ரீகாந்த்!

இந்திய வீரர்களைப் புலம்ப வைக்கவே அப்படி செய்தோம்… தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் பதில்!

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments