அமெரிக்கா, ரஷ்யாவை பந்தாடிய இந்தியா! – மற்றுமொரு சாதனை!

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2019 (11:50 IST)
ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று ஹாக்கி போட்டியில் இந்தியாவின் பெண்கள் அணி மற்றும் ஆண்கள் அணி இரண்டுமே அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

உலகளவில் புகழ்வாய்ந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றன.

இதில் அமெரிக்காவை எதிர்த்து விளையாடிய இந்திய பெண்கள் அணி முதல் சுற்றில் இந்து கோல்களை அடித்து 5-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. ஆனால் இரண்டாவது சுற்றில் சுதாரித்து கொண்ட அமெரிக்கா தொடர்ந்து 4 கோல்களை அடித்தது. இதனால் இருவரும்  சமவாய்ப்பில் இருக்க கடைசியாக ஒரு கோல் அடித்து இந்தியா ஆட்டத்தை நிறைவு செய்தது. இதனால் 6-5 என்ற மொத்த கோல் கணக்கின் அடிப்படையில் இந்தியா ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது.

அதேபோல் அதிரடியாக விளையாடிய ஆண்கள் அணி ரஷ்யாவை பந்தாடியது. இரண்டு ஆட்டங்களின் முடிவில் 11 – 3 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை தோற்கடித்து ஒலிப்பிற்கு தகுதி பெற்றது இந்திய அணி.

இருபால் ஹாக்கி அணிகளும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை போட்டிகளை தொடர்ந்து ஹாக்கியிலும் இந்தியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments