இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது மும்பையில் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணித் தவித்து வருகிறது.
ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
யங் மட்டுமே அரைசதம் அடித்த நிலையில் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், நியூசிலாந்து அணி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், அஷ்வின் மூன்று விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்துள்ள நிலையில், தற்போது நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலையில் மட்டுமே உள்ளது.
நாளை நியூசிலாந்து அணியின் இறுதி விக்கெட்டை வீழ்த்தி இந்தியா எளிதில் இலக்கை எட்டும் வாய்ப்பு உள்ளதால், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.