Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா… மீண்டும் கலக்கிய அக்ஸர் படேல்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (15:46 IST)
நான்காவது டெஸ்ட்டின் முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது.  அந்த பிட்ச் இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து விமர்சனங்களுக்கு இடையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்கப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதையடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேனியல் லாரன்ஸ் ஆகியோர் மட்டுமே சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடினர். மற்றவர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தற்போது வரை இங்கிலாந்து அணி 199 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்கள் இழந்துள்ளது. இந்திய அணியின் அக்ஸர் படேல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங்… ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கவைத்த தோனி!

17 ஆண்டுகால சோக வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்த RCB.. சென்னையை வீழ்த்தி அபார வெற்றி!

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments