Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி: ஒயிட் வாஷ் ஆனது மே.இ.தீவுகள்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (07:39 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி ஒயிட்வாஷ் ஆகி உள்ளது
 
நேற்றைய போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி 36 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 98 ரன்களும் கேப்டன் ஷிகர் தவான் 58 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து மீண்டும் இதனையடுத்து மழை குறுக்கிட்டதை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 35 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது 
 
ஆனால் அந்த அணி 20 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்ததது. சாஹல் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுப்மன் கில் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

'டே பாதர் என்னடா இதெல்லாம்'… தந்தையை ஜாலியாகக் கலாய்த்த அஸ்வின்!

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments