Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி -இஷான் கிஷான் அபார ஆட்டம்: இந்தியா வெற்றி!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (06:35 IST)
விராத் கோஹ்லி -இஷான் கிஷான் அபார ஆட்டம்: இந்தியா வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
 
நேற்றைய 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்தார்
 
இதனை அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்தாலும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் கேப்டன் விராட்கோலி ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். விராட் கோலி 73 ரன்களும் இஷான் கிஷான் 56 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிரடியாக 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த இஷான் கிஷான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த போட்டியின் மூலம் வென்றதால் 1-1 என்ற சம நிலைக்கு வந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments