Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி: அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு!

மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி: அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு!
, செவ்வாய், 22 மார்ச் 2022 (13:28 IST)
மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி: அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவுக்கு அரையிறுதியில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 
 
இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 230 என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிய நிலையில் இந்திய வீராங்கனைகளின் அபாரமான பந்து வீச்சு காரணமாக 43 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது 
 
இதனையடுத்து இந்திய மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அடுத்து இந்தியா 6 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு சென்று உள்ளதால் அரையிறுதிப் போட்டியில் பங்கு பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனிக்கு அப்றம் சி எஸ் கே கேப்டன் யார்? முன்னாள் வீரரின் கணிப்பு!