Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி போட்டி: மழையால் பாதிப்பு

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (09:16 IST)
இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி போட்டி
மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
 
இந்த போட்டியில் இரு அணிகளும் விளையாட தயார் நிலையில் உள்ள நிலையில் திடீரென தற்போது இந்த போட்டி நடைபெற இருக்கும் சிட்னி மைதானத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்னும் டாஸ் போடாமல் காலதாமதமாகி வருகிறது 
 
இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு போட்டி துவங்க வேண்டும். 9 மணிக்கு டாஸ் போட வேண்டிய நிலையில் மழை பெய்து வருவதால் மழை நிற்பதை பொறுத்துதான் டாஸ் போடுவது மற்றும் பத்து ஓவர் குறைத்து போட்டியை நடத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் முக்கியமான போட்டி ஆகும். ஆனால் மழையால் இந்த போட்டி தாமதமாகி வருவதால் டிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இருப்பினும் இந்த போட்டி 10 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments