Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதில் தங்கம் வென்று தமிழக வீராங்கனை சாதனை

இளவேனில்
Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (16:26 IST)
சிட்னியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் 7-வது ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 18-வயதான இளவேனில் என்ற வீராங்கனை 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் 249.8 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். 
 
இந்த வெற்றி குறித்து அவர் கூறியதாவது,
 
”சிட்னியில் என்னுடைய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் கடந்த சில மாதங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் என்றார். மேலும், அவர் பெற்ற தங்கப்பதக்கத்தை தனது பெற்றோர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
 
இவர் போட்டியின் முன்னர் நடத்தப்பட்ட தகுதிச்சுற்று போட்டியில்  631.4 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்தது கூறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments