Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை அட்டவணை வெளியிட்ட ஐசிசி – இந்தியா விளையாடும் அணிகள், தேதிகள் விவரம்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (11:00 IST)
அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்க இருக்கும் உலகக்கோப்பைப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளன. மே மாதம் 30 ஆம் தொடங்கி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் போட்டி நடைபெறும் நாட்கள் மற்றும் மைதானங்கள் அடங்கிய அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தமுறை உலகக்கோப்பைப் போட்டிகள் ஐபிஎல் போட்டிகள் போல எல்லா அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருப் போட்டியில் விளையாடும்படி அமைக்கப்பட்டுள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிப் பெறும்.

இதில் இந்தியாவுக்கு ஜூன் 5 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், ஜூன் 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், ஜுன் 13 ஆம் தேதி நியுசிலாந்துடனும், ஜூன் 16 ஆம் தேதி பாகிஸ்தானுடனும், ஜூன் 22 ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானுடனும், ஜூன் 27 மேற்கு இந்தியத் தீவுகளோடும், ஜூன் 30 இங்கிலாந்து அணியோடும், ஜுலை 2 வங்கதேசத்தோடும் , ஜூலை 6 ஆம் தேதி இலங்கையுடனும் மோதுகிறது.

ஜூலை 6 ஆம் தேதியோடு லீக் போட்டிகள் முடிய, ஜூலை 9 ஆம் தேதி முதல் அரையுறுதி ஆட்டமும், ஜூலை 11 ஆம் தேதி இரண்டாம் அரையிறுதி ஆட்டமும் நடைபெறுகிறது. ஜூலை 14 ஆம் தேதி இறுதிபோட்டி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments