Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஷிப் இறுதி போட்டி.. ரூ. 5000 கோடிக்கு சூதாட்டம்.. அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 11 மார்ச் 2025 (07:47 IST)
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இறுதியில், இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியை மையமாக வைத்து ரூ.5000 கோடிக்கு சூதாட்டம் நடந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சூதாட்டக்காரர்களுக்கு விருப்பமான அணியாக இந்திய அணி இருந்ததாகவும் ஏராளாமானோர் இந்திய அணி வெற்றி பெறும் என பணம் கட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சூதாட்டத்தை நடத்தியவர்கள் நிழல் உலக தாதா கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்றும், கூறப்படுகிறது.

துபாயில் நடந்த சூதாட்டத்தில் பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கும்பலும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அரையிறுதி போட்டியிலும் சூதாட்டம் நடைபெற்றது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

துபாயில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான சூதாட்டக் குழுக்கள் "இந்திய அணி வெற்றி பெறும்" என்று கணித்ததாகவும், சிலர் மட்டுமே "நியூசிலாந்து அணி வெற்றி பெறும்" என்று சூதாட்டத்தில் பணம் போட்டதாகவும் தெரிகிறது.

முக்கியமான போட்டிகளில் சூதாட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறுவது தொடர்கதையாகி வருவதால், அதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments