ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் த்ரில் வெற்றி.. கடைசி ஓவரில் கலக்கிய புவனேஷ்வர்..!

Siva
வெள்ளி, 3 மே 2024 (06:16 IST)
நேற்று நடந்த ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டை இழந்தாலும் அதன் பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் பராக் அதிரடியால் ஓரளவு ரன்கள் உயர்ந்தது 
 
இந்த நிலையில் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒரே ஒரு வித்தியாசத்தில் ஹைதராபாத்தில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில்  இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் புவனேஸ்வர் கடைசி பந்தில் விக்கெட் எடுத்ததால் ஹைதராபாத் அணி அபாரமாக வெற்றி பெற்றது 
 
பராக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தின் இந்த வெற்றி காரணமாக அந்த அணி 12 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தை பிடித்து விட்டது என்பது சிஎஸ்கே ஐந்தாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments