Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தல ரசிகர்களே ரெடியா.! ஏப்.28-ல் CSK vs SRH போட்டி.! ஆன்லைனில் இன்று டிக்கெட் விற்பனை...!

Advertiesment
Chennai Match

Senthil Velan

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (09:13 IST)
வரும் 28 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே  நடைபெற உள்ள போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை இன்று தொடங்குகிறது.  டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய டெல்லி - குஜராத் அணிக்கு இடையேயான போட்டியுடன் 40 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
 
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10:40 மணிக்கு இணையதளத்தில் தொடங்கவுள்ளது.
 
சி, டி, இ கீழ் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.1,700 எனவும் ஐ, ஜே, கே மேல் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.2,500 எனவும் ஐ, ஜே, கே கீழ் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.4 ஆயிரம் எனவும் சி,டி,இ மேல் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.3,500 எனவும், கேஎம்கே டெரஸ் டிக்கெட் விலை ரூ.6 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
Paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்களை பெறலாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கள் ஏன் ஏழை நாட்டு சீரிஸ்களில் விளையாட வேண்டும்… சேவாக்கின் திமிர் கருத்தால் எழுந்த சர்ச்சை!