Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

Siva
ஞாயிறு, 26 மே 2024 (08:21 IST)
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்ற கூறப்படும் ஐபிஎல் போட்டிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகளில் எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
20 புள்ளிகள் எடுத்து கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்த நிலையில் ஐதராபாத் அணி 17 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்று இருந்தது. முதல் குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா அணியுடன் ஐதராபாத் தோல்வி அடைந்தாலும் அதன் பின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இரு அணிகளும் கோப்பையை வெல்ல ஆவேசமாக விளையாடும் என்றும் இரு அணிகளும் தங்கள் முழு திறமையை நிரூபிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் இரு அணிகளுமே சம பலத்தில் உள்ளதால் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
கொல்கத்தா அணியை பொறுத்தவரை வெங்கடேஷ் ஐயர், சுனில் நரேன், நிதிஷ் ரானா, ரிங்குசிங், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நட்சத்திர ஆட்டக்காரர்களாக உள்ளனர். அதேபோல் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிட் க்ளாஸ், க்ளாசன், புவனேஷ் குமார், நடராஜன், பேட் கம்மின்ஸ், ராகுல் திரிபாதி ஆகியோர் நட்சத்திர ஆட்டக்காரர்களாக உள்ளனர். இரு அணிகளிலும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் இருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments