Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியுடன் மோதி 4 முறை மண்ணை கவ்விய ஐதராபாத்

Webdunia
திங்கள், 28 மே 2018 (07:51 IST)
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியுடன் ஐதராபாத் அணி நான்கு முறை மோதி நான்கு முறையும் தோல்வி அடைந்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரில் ஐதராபாத் அணி லீக் போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆனாலும் சென்னை அணியை ஐதராபாத் அணி ஒருமுறை கூட வீழ்த்தவில்லை.
 
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற முதல் லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், மே 13ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும், மே 22ஆம் தேதி நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மற்றும் இறுதி போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும் சென்னை அணியுடன் மோதி தோல்வி அடைந்தது. 
 
அபாரமான பந்துவீச்சாளர்களை கொண்ட ஐதராபாத் அணி, முதலில் பேட் செய்து குறைந்த ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெற்று வந்த நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 179 ரன்கள் எடுத்தபோதிலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை என்பது. குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments