கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க தவறிய பெங்களூர்: ஐதராபாத்திடம் வீழ்ந்தது

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (04:57 IST)
இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சினால் வெற்றி பெற்று வரும் ஒரே அணி ஐதராபாத் என்று இருந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் ஐதராபாத் அணியினர் அபாரமாக பந்துவீசி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது.
 
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ச்சியினாலும், அபாரமான பந்துவீச்சினாலும் ரன்கள் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றது. கடைசி ஒவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த பெங்களூரு, முதல் ஐந்து பந்துகளில் ஆறு ரன்கள் எடுத்து கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க தவறியதால் இந்த போட்டியில் தோல்வி அடைந்தது
 
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அதேநேரத்தில் பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments