மாறுவேடத்தில் தி.நகரில் ஷாப்பிங் செய்த மேத்யூ ஹைடன்

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (21:12 IST)
ஆஸ்திரேலியாவின் அதிரடி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை பார்ப்பதற்காக இந்தியாவுக்கு வருகை தருவது உண்டு. அந்த வகையில் இந்த ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளராக உள்ள மேத்யூ ஹைடன், சிஎஸ்கே விளையாடும் அனைத்து போட்டி நடக்கும் இடங்களுக்கும் சென்று வருகிறார்.
 
அந்த வகையில் வரும் 6ஆம் தேதி சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ள நிலையில் அட்வான்ஸாக சென்னை வந்துவிட்டார் மேத்யூ ஹைடன். இந்த நிலையில் தனது நண்பர்களின் சவாலை ஏற்று கொண்டு மாறுவேடம் போட்டு சென்னை தி.நகர் சென்று  வாட்ச், சட்டை, லுங்கி உள்ளிட்ட பொருட்களை பர்சேஸ் செய்துள்ளார். 
 
பெரிய மீசை, தாடியுடன் மாறு வேடத்தில் சென்றதால் ஹைடனை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் ஹைடன் தனது நண்பர்களுடன் விடுத்த சவாலில் வெற்றி பெற்றதாக தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். புகைப்படங்களில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் யாருமே ஹைடனை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments