Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி பரிசு: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (08:41 IST)
நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி பரிசு: முதல்வர் அறிவிப்பு!
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூபாய் 2 கோடி பரிசு வழங்கப்படும் என ஹரியானா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
 
நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா மிக அபாரமாக ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஹரியானா மாநில முதலமைச்சர் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூபாய் 2 கோடி பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அரசு வேலை வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீரஜ்சோப்ராவுக்கு ஒரு கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. தோனியும் நீரஜ் சோப்ராவும் ஒரே நேரத்தில் இந்திய ராணுவத்தில் பணி புரிந்ததால் தோனியின் பரிந்துரையின் பேரில் இந்த பரிசு கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது 
 
அது மட்டுமின்றி 100 ஆண்டுகளுக்கு பின்னர் தடகள போட்டியில் தங்கம் கிடைத்துள்ளதை அடுத்து இன்னும் பல பரிசுகள் நீரஜ் சோப்ராவுக்கு காத்திருக்கின்றது என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments