Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களால் முடிந்ததை கொடுத்தோம், நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம்: ஹர்திக் பாண்ட்யா..!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (07:49 IST)
ஐபிஎல் இறுதி போட்டியில் எங்களால் முடிந்ததை செய்தோம் என்றும் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்றும் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 
 
இதனை அடுத்து தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா கூறிய போது நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம், எங்களால் முடிந்த வரை எல்லாவற்றையும் கொடுத்தோம், எங்களுடைய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தார். 
 
மேலும் இந்த வெற்றிக்கு தோனி தகுதியானவர், நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் சந்தித்ததில் மிகவும் நல்லவர் அவர் ஒருவர்தான், இன்று கடவுள் அவருக்கு உரிய மரியாதையை வழங்கி உள்ளார் என்றும் கூறியுள்ளார்
 
என் மீதும் கடவுள் இந்த போட்டியில் இரக்கம் காட்டினார், ஆனால் இந்த நாள் தோனிக்கு ஆனது, சிஎஸ்கே அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments