Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொட்டிப் படுக்கையைக் கூட இறக்கி வைக்கல… அதுக்குள்ள – ஹர்பஜன் அலப்பறைகள் !

பொட்டிப் படுக்கையைக் கூட இறக்கி வைக்கல… அதுக்குள்ள – ஹர்பஜன் அலப்பறைகள் !
, திங்கள், 18 மார்ச் 2019 (08:06 IST)
ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் மீண்டும் சிஎஸ்கே அணியின் விளம்பர படங்களில் நடிப்பது குறித்து சென்னை வீரர் ஹர்பஜன் சிங் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பத்து வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் வீளையாடி வந்தார். அதில் சில சீசன்களில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். ஆனால் தற்போது பார்ம் அவுட் காரணமாக அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது. அதனால் கடந்த சீசன் முதல் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சென்னை அணிக்கு வந்தபின் சிறப்பாக பந்து வீசினாரோ இல்லையோ செந்தமிழில் டிவிட் செய்து தமிழக ரசிகர்களை அவ்வப்போது குஷிப்படுத்தி வருகிறார். தீபாவாளி, தமிழர் திருநாள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், கஜாபுயல் பாதிப்பு அனைத்தும் ஹர்பஜன் தமிழில் ட்விட் செய்து தனது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் 12 ஆவது சீசன் தொடங்க இன்னும் ஒரு வாரகாலமே உள்ளட் நிலையில் மீண்டும் தமிழில் டிவிட் செய்து சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
 
webdunia

ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை வருவது குறித்து ‘பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய என் அருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க, தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன். ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான். அதே உணர்வு தான் என்னுள் இப்போது #விசில்போடு, #சிஎஸ்கேபேன்அபிஷியல்’ என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். முதல் போட்டி சென்னையில் வரும் மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அடுத்ததாக சிஎஸ்கே அணியின் விளம்பரப்படம் ஒன்றில் நடிக்கும் வீடியோவைப் பகிர்ந்து ‘வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல தோனி பாட்டு போட நான், முரளி விஜய், ஜாதவ் டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க.ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த சிஎஸ்கேவின் ஆட்டத்தை’ என டிவிட் செய்துள்ளார்.

மற்றொரு டிவிட்டில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே இன்பம் வரலாம் துன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம் சென்னை ஐபிஎல் நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே. செம பீலிங் வித் மச்சான் தோனி மாப்ள, ரெய்னா’ எனத் தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது ஏன்? மனம் திறந்த அஸ்வின்