Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்வின் மீது வெறுப்பு காட்டும் ஹர்பஜன்: கோபத்தில் கோஹ்லி!!

Advertiesment
அஸ்வின் மீது வெறுப்பு காட்டும் ஹர்பஜன்: கோபத்தில் கோஹ்லி!!
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (12:22 IST)
இந்திய அணி வீரர் அஸ்வின் மீது கடுப்பை காட்டியுள்ளார் மற்றொரு வீரரான பிரபல ஆப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். 

 
நியூசிலாந்துக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக பிட்சை பற்றிய விமர்சனம் ஒன்றை டிவிட்டரில் தெரிவித்து இதனை தொடங்கி வைத்தார் ஹர்பஜன்.
 
அஷ்வின் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க ஆரம்பித்த பிறகு இந்தியா எட்டு டெஸ்ட் தொடரில் வென்றிருக்கிறது. இதில் ஏழு முறை தொடர் நாயகன் விருதை அஷ்வின் பெற்றுள்ளார். மூன்றே டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வின். 
 
இதனால், இதற்கு மேலும் ஹர்பஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்ற நிலையில் உள்ள ஹர்பஜன், இவ்வாறு தனது  வெறுப்பை காட்டி இருக்கலாம் என தெரிகிறது. 
 
ஹர்பஜனின் கமெண்ட் குறித்து அணி தலைவர் கோஹ்லியிடம் கேட்டபோது கோபத்துடன், சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் என்றாலும் கூட ஒழுங்காக பந்து வீசினால் மட்டும் தான் விக்கெட்டுகள் கைப்பற்ற முடியும். எந்த பிட்ச்சாக இருந்தாலும் ஒழுங்காக பந்து வீசினால் தான் விக்கெட் கிடைக்கும், அதற்கு பின்னர் கடுமையான உழைப்பு இருக்கிறது என கூறினார். 
 
இதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஹர்பஜனின் இந்த கருத்தை கண்டித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்த தெ.ஆப்பிரிக்கா - 5 போட்டிகளிலும் அமோக வெற்றி